தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி முடிவதற்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தொடங்கிய பருவமழை தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது.

அதிலும் நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டு நாட்கள் கனமழை இருக்கும் என ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு அந்த பகுதி மக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலத்திற்கு கேரளாவை சேர்ந்த 3 பேர் ஜிப்பில் சென்றுள்ளனர். அவர்கள் ஒவேலி பகுதிக்கு சென்று விட்டு தர்மகிரி பாலத்தை கடக்க முயற்சி செய்து போது காட்டாற்று வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டனர்.

அப்போது கார் ஆற்றின் நடுவே சிக்கிய போது காரில் இருந்தவர்கள் கீழே குதித்து உயிர்த்தப்பினர். அதிர்ஷ்டவசமாக மூன்று பேரும் விபத்திலிருந்து உயிர் தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.