
ஆப்பிரிக்காவில் 3 சிறுவர்களை நீர்யானை அப்படியே விழுங்க முயற்சித்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் 3 சிறுவர்கள் நீச்சல் அடித்து ஜாலியாக குளிப்பதை பார்க்க முடிகிறது. அப்போது அங்கே ஒரு பெரிய நீர் யானை வந்தபோது அவர்கள் அஞ்சிவிட்டனர்.
அந்த நீர் யானை சத்தம் கேட்டு சிறுவர்கள் அலறியடித்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடினர். அதிர்ஷ்டவசமாக உரிய நேரத்தில் அனைவரும் குளத்தை விட்டு வெளியேறிய காரணத்தால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. சென்ற 2011-ம் வருடத்தில் வெளியான இந்த வீடியோ தற்போது இணையத்தில் மீண்டும் டிரெண்டாகி வருகிறது.
https://twitter.com/TerrifyingNatur/status/1657641639664398337?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1657641639664398337%7Ctwgr%5Edfb7a680b1cfe59972bbb4c006a0ddfc3c7bd79d%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Fsocial%2Fhippopotamus-nearly-swallows-children-in-chilling-viral-video-444787