உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இருவரை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜலாலுதீன் என்ற சங்கூர்பாபா மற்றும் நஸ்ரின் என்பவர் ஆகிய இருவரும், ஏழைகள், ஆதரவற்றோர், கணவரை இழந்த பெண்கள் உள்ளிட்டோருக்கு நிதி வழங்குவதோடு, மிரட்டல் மூலமாகவும் மதம் மாற்றும் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், ஜலாலுதீன் நேபாள எல்லையில் உள்ள பல்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், சைக்கிளில் வளையல் விற்பனையாளர் இருந்து, பின்னர் கிராமத் தலைவராக உயர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

அதைவிட அதிர்ச்சிக்குரிய தகவல் என்னவெனில், ஜலாலுதீனுக்கு 40 வங்கிக் கணக்குகளில் ரூ.106 கோடி பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பெறப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இத்துடன், அவருக்கு சொகுசு பங்களா ஒன்று உள்ளதாகவும், அதன் ஒரு பகுதியில் குடும்பத்தினரையும் மற்றொரு பகுதியில் ஆதரவாளர்களையும் தங்க வைக்க திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த கட்டிடம் சட்டவிரோதமானதாகும் என நிரூபிக்கப்பட்டதால் அதனை இடித்து எடுக்கப்பட்டுள்ளது.

இப்போது விசாரணை அதிகாரிகள், இவர்கள் மதம் மாற்றியவர்களுக்கு பணம் கொடுத்தார்களா? இந்த நிதிகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டதா? என்ற கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.