
தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் ஒரு தோட்டத்து வீடு அமைந்துள்ளது. அந்த வீட்டிற்கு வெளியே நேற்று ஒரு மூதாட்டி நடந்து சென்றார். அப்போது திடீரென வந்த குரங்குகள் மூதாட்டியின் புடவையை பிடித்து இழுத்து கீழே தள்ளியது.
அதன் பிறகு குரங்குகள் ஒன்று சேர்ந்து மூதாட்டியை கடித்தது. இதனால் வலியில் மூதாட்டி அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தில் குரங்குகளை விரட்டியடித்து மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குரங்குகள் மூதாட்டியை கீழே தள்ளி தாக்கிய சிசிடிவி வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலானது.
எனவே குரங்கு தொந்தரவை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.