இந்திய அஞ்சல் துறையில் 44,228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்திலும் தாலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 18 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்ட 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குள் https://indiapostgdsonline.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக 12 ஆயிரம் முதல் 29 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.