தமிழக சட்டசபையில் இன்று முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இன்று சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜு மதுரை மேற்கு தொகுதியில் தாழ்ந்த நிலையில் மின்சார கம்பிகள் இருக்கிறது. எனவே அதனை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு நீங்கள் கேட்டால் எந்த அமைச்சரும் உங்களுக்கு செய்ய மாட்டேன் என்று சொல்ல மாட்டார்கள் என்றார். இதனால் சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.

பின்னர் இந்த கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார். அவர் கூறும் போது மதுரை மேற்கு தொகுதியில் 218 மின் மாற்றிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிதாக மூன்று துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தாழ்ந்து செல்லும் மின் கம்பிகளை மாற்ற திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதற்கு முன்பாக பேரவை தலைவர் செல்லூர் ராஜுவை கேள்வி கேட்க அழைத்தார். அப்போது நகராட்சி துறை அமைச்சர் உங்களுக்கு ரெக்கமண்டேஷன் என்று கூறினார். மேலும் அப்போதும் அவையில் சிரிப்பலை எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.