
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. அப்படி செல்போன் பயன்படுத்தும் போது அடிக்கடி செல்போன் வெடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் செல்போன் எதனால் வெடிக்கிறது அதனை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
செல்போனுக்கு சார்ஜ் ஏறிக் கொண்டிருக்கும்போது செல்போனை பயன்படுத்தக் கூடாது.
பவர் பேங்க் சாதனங்களையும் கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.
அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பவர் பேங்க் பயன்படுத்துவது நல்லது.
வழக்கமான நேரத்தை விட விரைவாக சார்ஜ் ஏறுவதும் இறங்குவதும் பேட்டரியில் சிக்கல் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.
20 சதவீதத்திற்கும் கீழாக சார்ஜ் குறைந்தால் மட்டுமே மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும்.
போன் வெப்பமானால் இன்டர்னல் ஸ்டோரேஜ் கிளீன் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் செல்போன் பேட்டரி வெடிப்பதை தவிர்க்கலாம்.