இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக போலி அழைப்புகள் மற்றும் போலி குறுஞ்செய்திகள் மூலமாக மோசடிகள் அதிகரித்து விட்டன. இந்த நிலையில் செல்போனுக்கு தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகளில் பேசும் பெண்கள் முதலீடு மற்றும் ஓடிபி குறித்து பேசி மோசடி செய்வது அதிகரித்து வருகின்றது.

இதுபோல அழைப்புகளில் பேசுவோர் உண்மையில் பலர் பெண்களே கிடையாது. செயலில் உள்ள வசதியை பயன்படுத்தி பெண் போல ஆண்களே பேசி பணப்பறிப்பில் ஈடுபடுகிறார்கள். இதனால் தெரியாத பெண்கள் ஓடிபி கேட்கும் போதும் முதலீடு செய்ய கூறும் போதும் எச்சரிக்கை வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.