பொதுவாக கணவன் மனைவிக்குள் குடும்பத்தகராறு ஏற்படுவது வழக்கம் தான். பிரச்சனைகள் எப்படி வேண்டுமானாலும் வரலாம். ஆனால் சில நேரங்களில் அந்த பிரச்சினைகளை கேட்கவே வினோதமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். இதுக்கெல்லாம் போய் சண்டை போடுவார்களா என்ற மாதிரி தோன்றும். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. அதாவது டாக்டர் கோனிக் என்பவர் தன் மனைவியுடன் ஹவாய்க்கு சுற்றுலா சென்று இருந்தார்.

அப்போது தன் மனைவியுடன் அவர் போட்டோ எடுக்க வேண்டும் என்று கூறிய நிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபத்தில் தன் மனைவியை அவர் அடித்து தாக்கியதோடு பாறாங்கல்லாலும் அடித்துள்ளார். தற்போது பலத்த காயம் அடைந்த அவருடைய மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் வேலை பார்க்கும் மருத்துவமனை நிர்வாகம் கோனிக்கை சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.