
பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி என்ற சீரியலில் கோபியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் சதீஷ்குமார். இவர் சீரியல்கள் மட்டுமின்றி படங்கள் மற்றும் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சதீஷ்குமார் கடந்த வருடம் சென்னையில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது பெண் ரசிகை ஒருவர் சதீஷ்குமாரிடம் செல்பி எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.
அதன்பின் சதீஷின் செல்போன் நம்பரை அந்தப் பெண் கண்டுபிடித்த நிலையில் அவருக்கு அடிக்கடி தொடர்பு கொண்டுள்ளார். இதனால் அந்த பெண்ணின் நம்பரை சதீஷ் பிளாக் செய்துவிட்டார். இதனால் கடந்த சில நாட்களாக சதீஷ் வீட்டிற்கு அந்த பெண் செல்லும் நிலையில் குங்குமம் தடவிய எலுமிச்சை பழம் போன்றவற்றை வைத்து பில்லி சூனியம் வைத்து விடுவதாக அவரை மிரட்டியுள்ளார். இதனால் சதீஷ் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.