ஜப்பானில் தவறாக கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் 48 ஆண்டுகள் கழித்த ஒருவர் தற்போது நிரபராதி என்று அறிவிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இவாவோ ஹகமடா என்பவர் முன்னாள் குத்துச்சண்டை வீரர் ஆவார். இவருக்கு தற்போது 89 வயது ஆகிறது. இவர் 1966 ஆம் ஆண்டு நால்வர் கொலை வழக்கில் காவல்துறை அதிகாரிகளால் தவறாக கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் 2014 ஆம் ஆண்டில் மறுபரிசிலினை வழக்கின் போது விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மீண்டும் அவரை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஆண்டு அவரை நிரபராதி என்று விடுதலை வழங்கியுள்ளது. அதோடு செய்யாத குற்றத்திற்காக தவறாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததற்காக ரூபாய் 1.44 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது ஜப்பானில் இதுவரை வழங்கப்பட்ட கம்பன்சேஷனில் ஒரு முக்கிய சாதனையாகும்.

இதைத் தொடர்ந்து “ஹகமாடாவின் வழக்கறிஞர்கள் அவருக்கு வழங்கப்பட்ட இழப்பீடு அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட மனவலி மற்றும் நஷ்டத்திற்கு பொருத்தமானது அல்ல” என்று கூறினார். தற்போது 89 வயதான ஹமடா தனது சகோதரியின் பாதுகாப்பில் ஆதரவாளர்களின் உதவியுடன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். மேலும் இவரது வழக்கின் மூலம் ஜப்பானின் நீதித்துறையின் குறைபாடுகள் மீண்டும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.