
பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த சௌந்தர்யா என்பவர் புற்றுநோய் காரணமாக நேற்று உயிரிழந்தார். இந்த நிலையில் நம்பிக்கை கூறிய செய்தி வாசிப்பாளர் என்று குறிப்பிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வைக்கப்பட்டுள்ள அவருடைய உடலுக்கு செய்தியாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பாளர்கள் உள்ளிட்ட ஊடகத்துறையினர் மற்றும் பிறர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 30 வயதில் புற்றுநோய் காரணமாக இளம் செய்தி வாசிப்பாளர் உயிரிழந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.