
ஐபிஎல் 2025 தொடரின் 61வது போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் அதிரடியாக ஆடி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இந்த போட்டியில், முதல் பந்திலேயே ஓப்பனராக துள்ளலுடன் ஆடிய மார்ஷ், இஷான் மலிங்கவின் ஓவரில் சிக்ஸர் அடித்தார்.
அந்த ஓவரின் முதல் பந்தில், டீப் பேக்வேட் ஸ்கொயர் லெக் பகுதியில் பந்தை உயரமாக ஒருசாரியாக அடித்த மார்ஷ், எல்லைக் கோட்டிற்கு அருகே நிறுத்தப்பட்ட டாடா கர்வ் காரை மீது பட்டது. இதில் அந்த கார் சேதமடைந்தது. இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கிராமப்புற கிரிக்கெட் மேம்பாட்டிற்காக ரூ.5 லட்சம் மதிப்புள்ள கிரிக்கெட் கிட்கள் வழங்கப்படும். இது இந்த போட்டியின் சிறந்த தருணமாக மாறியது என்று கூறியுள்ளனர்.
— Chandra Moulee Das (@Dasthewayyy) May 19, 2025
மொத்தம் 39 பந்துகளில் 65 ரன்கள் அடித்த மார்ஷ், அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். இந்த மாஸ் இன்னிங்ஸின் மூலம், தனது அணிக்கு வலுவான தொடக்கத்தை வழங்கினார். டாடா மோட்டார்ஸ், ஐபிஎல்லின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக இருக்கின்றது. கடந்த ஆண்டுகளிலும், இவர்களின் சிக்ஸர் இன்ஸென்டிவ் திட்டம் மூலம், காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் காபி தோட்டங்கள் உள்ளிட்ட பல சமூக திட்டங்களுக்கு நன்கொடை வழங்கப்பட்டுள்ளன.
இந்த முயற்சி, விளையாட்டு மற்றும் சமூகத்தின் இடையே உருவாகும் நேரடி உறவை வெளிப்படுத்தும் வகையில், ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.