கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் மாணவர்கள் தாக்கியதில் ஒரு 15 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அங்குள்ள Mj உயர்நிலைப் பள்ளியில் முகமது சஹபாஸ் என்ற 15 வயது சிறுவன் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த சிறுவனுக்கும் சில மாணவர்களுக்கும் இடையே கடந்த 23ஆம் தேதி ஒரு தனியார் பயிற்சி மையத்தில் சண்டை ஏற்பட்டது. இந்த சண்டை முடிந்த பிறகு மாணவர்கள் அவரவர் வீட்டிற்கு செல்வது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மாணவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதில் முகமது மிகவும் காயம் அடைந்தார். அந்த சிறுவனை முதலில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நிலைமை மோசம் அடைந்ததால் பின்னர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் கடந்த சனிக்கிழமை சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 5 மாணவர்களை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ள நிலையில் என்ன பிரச்சனை என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.