
மத்தியப்பிரதேச மாநிலம் கட்னியில் உள்ள ஒரு பள்ளியில், ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு மதுபானம் வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த ஆசிரியர் நவீன் பிரதாப் சிங் பகேல் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கீராணி என்ற பகுதியில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் பணியாற்றி வருகிறார்.
View this post on Instagram
ஆசிரியர் பகேல் மதுபானம் குடித்த நிலையிலேயே பள்ளிக்கு வருவதாகவும், மாணவர்களுக்கு பாடம் சொல்ல வேண்டிய நேரத்தில், மதுபானம் வழங்கும் நிகழ்வுகள் நடந்துவந்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தை ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். அதில் ஆசிரியர் மாணவர்களுக்கு குடிப்பதற்கான பாட்டில்கள் வழங்குவது தெளிவாக தெரிகிறது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் டாக்டர் திலீப் யாதவ் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆசிரியர் நவீன் பிரதாப் சிங் பகேலை இடைநீக்கம் செய்துள்ளார். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணையும் நடைபெற்று வருகிறது. மாணவர்களின் பாதுகாப்பை புறக்கணித்தது குறித்து கல்வித் துறையிலும் கண்டனம் கிளம்பியுள்ளது.