
பிரபல இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா. இவர் தற்போது ஹிட் லிஸ்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படத்தை சூரிய கதிர் இயக்கியுள்ள நிலையில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தை இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் தயாரித்துள்ள நிலையில், தற்போது படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இந்த ட்ரெய்லர் வீடியோ ஒரு சைக்கோ கொலைகாரன் ஹீரோவின் குடும்பத்தை கொடூரமாக கொலை செய்யும் போது அந்த குற்றவாளியை ஹீரோ எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது. மேலும் பரபரப்பு நிறைந்த ஹிட் லிஸ்ட் படத்தின் டிரைலர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.