
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கமல்ஹாசன் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக்லைஃப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் சிம்பு, நடிகை திரிஷா மற்றும் நடிகை அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஜூன் மாதம் 5-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.
இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் நிலையில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என்று பட குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது வீடியோவை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.