
அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நிலவில் ரயில் சேவையை தொடங்க உள்ளதாகவும் அதற்கான நிறுத்தத்தை அமைக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். இந்த ரயில் பூமியை விட ரயிலில் வித்தியாசமான முறையில் இயங்கும். நாசா நிறுவனம் பேலோட் போக்குவரத்தை வழங்குவதற்காக முதலில் ரயில் சேவையை தொடங்க உள்ளது.
இந்நிலையில் Flexible Levitation on track என அழைக்கப்படும் ரயில் சேவையானது 3 அடுக்கு ஃபிலிம் டிராக்கில் காந்த லெவிடேஷனை பயன்படுத்தும். அதன்பிறகு மிதக்கும் ஆற்றல் இல்லாத வகையில் தரையில் செல்லும் விதமாக ரயில் உருவாக்கப்பட இருக்கிறது. மேலும் இந்த ரயில் சேவையானது ஆராய்ச்சியாளர்கள் நிலவிற்கு செல்லும்போது ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களைக் கொண்டு செல்லும் விதமாக நாசா மட்டும் பயன்படுத்தும் விதமாக உருவாக்கப்பட இருக்கிறது.