
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வருடம் வெளியான மகாராஜா மற்றும் விடுதலை-2 உருவாகி இரண்டு படங்களுமே மாபெரும் அளவில் வெற்றி அடைந்தது. நடிப்பை தாண்டி பிக் பாஸ்-8 நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வலம் வந்தார் விஜய் சேதுபதி. இவர் நடிகனாக மட்டுமின்றி வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். தற்போது இவர் நடிப்பில் ஏஸ், டிரெயின் மற்றும் காந்தி டாக்கீஸ் படங்கள் தயாராகி வருகிறது .
இந்த படங்களை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் முதன்முறையாக இணைந்துள்ளார்கள். இந்நிலையில் இந்த படத்தில் சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலமாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ரோஷினி ஹரி பிரியா லீட் கேரக்டரில் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இவர் முன்னாள் பிக்பாஸ் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு வாய்ப்பு கிடைத்ததால் பலரும் பாராட்டி வருகிறார்கள்.