
போர் ஒப்பந்தத்திற்கு அடுத்து ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்ஷிப்பில் பஞ்சாப் அணி -ராஜஸ்தான் அணியுடன் மோதியது.
அந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி, ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டிற்கு பின் தற்போது 2025 இல் பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஐ.பி.எல் கோப்பையை வென்ற கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது பஞ்சாப் பணியில் விளையாடுவதால் பஞ்சாப் அணி பிளே ஆஃப் சென்றுள்ளது என சுனில் கவாஸ்கர் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
அதாவது, “கடந்த ஆண்டு ஐ.பி.எல் கோப்பையை வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ்க்கு போதிய பாராட்டுக்கள் கிடைக்கவில்லை. பாராட்டுக்கள் அனைத்துமே வேறொருவருக்கு சென்று விட்டது.
ஆட்டத்தில் முக்கிய பங்காற்றிய கேப்டனுக்கு தான் அனைத்து பாராட்டுகளும் கிடைக்க வேண்டுமே தவிர, ஓய்வறையில் அமர்ந்து இருக்கும் நபருக்கு அல்ல. ஆனால் அதுபோல தற்போது இல்லை இந்த ஆண்டு ஸ்ரேயாசுக்கு நியாயமான பாராட்டுக்கள் கிடைக்கிறது.
மாற்றாக ரிக்கி பாண்டிங்கிற்கு யாரும் அனைத்து பாராட்டுகளையும் கொடுக்கவில்லை” என மறைமுகமாக கௌதம் கம்பீரை விமர்சனம் செய்துள்ளார்.