
சென்னை கிளாம்பக்கத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை இன்று காலை 11 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். தென் மாவட்டங்களுக்கு பொதுமக்கள் செல்ல ஏதுவாக 88.52 ஏக்கரில் 393 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து ரிசல்ட் குறையும் என்ற கூறப்படுகிறது. இந்த பேருந்து நிலையத்தில் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் இன்று பேருந்து நிலையம் திறக்கப்பட்ட மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.