சென்னை மற்றும் திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் சென்னை, பெங்களூரு மற்றும் மைசூர் இடையே ஒரு ரயிலும் சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடையே ஒரு வந்தே பாரத் ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் விதமாக வந்தே பாரத் ரயில் சேவை பிரதமர் மோடி ஆகஸ்ட் 6ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். அதிவேக சேவை வழங்கி வரும் இந்த ரயிலானது பயண நேரத்தை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.