
சென்னையில் இருந்து பல மாவட்டங்களுக்கு தினம் தோறும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் – மதுரை இடையே இரவு 10.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் மற்றும் மதுரை இடையே இன்று பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
அதனைப் போலவே மதுரை -எம்ஜிஆர் சென்ட்ரல் இடையே இரவு 10.50 மணிக்கு புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை மற்றும் திண்டுக்கல் இடையே நாளை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.