சென்னை கோட்டூர் புறத்தில் உள்ள ஐஐடி வளாகத்தில் ஸ்ரீவத் சன்னி (25) என்ற ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த மாணவர் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த மாணவர் அரியர் வைத்திருந்ததோடு படிப்பதிலும் சிரமமாக இருக்கிறது என்று புலம்பியுள்ளார். இதன் காரணமாகத்தான் மாணவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று ஒரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட‌ நிலையில் மற்றொரு மாணவர் தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அதாவது மாஸ்டர் டிகிரி படித்து வந்த வீரேஷ் என்ற மாணவர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இது தொடர்பாக போலீசார் கூறும்போது படிப்பதில் சிரமம் ஏற்பட்டதன் காரணமாக மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் மற்றொரு மாணவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். மேலும் படிப்புதான் மாணவர்களின் தற்கொலைக்கு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.