
சென்னை செம்மஞ்சேரியில் மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் சென்னையில் அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு இதற்கு முன்னதாக அறிவித்திருந்தது. ஹாக்கி, டேபிள் டென்னிஸ் மற்றும் நீச்சல் குளம் என 20-கும் மேற்பட்ட விளையாட்டு அரங்குகள் இந்த திட்டத்தில் அமைய உள்ளன. மேலும் விளையாட்டு வீரர்களுக்கான அறைகள் மற்றும் உணவகங்கள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.