தமிழகத்தில் சமீப காலமாகவே மனிதர்களை நாய்கள் கடித்து காயம் ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சென்னையில் தினம் தோறும் தெரு நாய்கள் கடித்ததாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதன்படி சென்னை கொரட்டூர் பகுதியில் 12 வயது சிறுவனை ராட்வைலர், பாக்சர் வளர்ப்பு நாய்கள் என்று கடித்து குதறியது. இதனால் சிறுவன் வலியால் கதறி துடித்தான். அவரின் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.