சென்னைக்கு நேற்று துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் 326 பயணிகள் இருந்த நிலையில் இந்த விமானத்தின் மீது திடீரென மர்மமான முறையில் லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது அந்த விமானம் ஏர்போர்ட்டில் தரையிறங்கும் போது பரங்கிமலை பகுதியில் இருந்து பச்சை நிறத்தில் ஒரு லேசர் ஒளி விமானத்தின் மீது கரெக்டாக விழுந்தது.

இதனால் விமானி பதற்றம் அடைந்த நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்டு பத்திரமாக தரையிறக்கினார். இது தொடர்பாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறை புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஏற்கனவே 2 வருடங்களுக்கு முன்பாக இது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் நடந்துள்ளதால் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.