சென்னையில் இரண்டு மருத்துவர்கள் மனஅழுத்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் பணி செய்த மருத்துவர் மருதுபாண்டியன் மற்றும் ESI மருத்துவமனையில் பணி செய்த மருத்துவர் சோலைசாமி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததுள்ளனர்.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரணத்திற்கு முன் இருவருமே தூக்கமில்லாமல் 24 மணி நேரம் பணி செய்திருக்கின்றனர். மருத்துவர்கள் பற்றாக்குறையால் அதிக அழுத்தம் ஏற்பட்டு இப்படியான உயிரிழப்புகள் நடப்பதாக சக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.