மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்திக் கொண்டுவரப்பட்ட சிவப்பு நிற காது உடைய 2600 அரிய வகை நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று நேற்று நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.

அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்து சந்தேகிக்கப்பட்ட பயணிகளின் உடமைகளை முழுமையாக சோதனை நடத்தினர். அதில் சென்னை பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்தபோது அதில் நட்சத்திர ஆமைகள் உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 2600 சிவப்பு நிற காதுகளை உடைய அலங்கார நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.