
அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில் திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். இன்றுடன் அவர் கைதாகி ஒரு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி கைது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 14ஆம் தேதி கோவையில் திமுக முப்பெரும் விழா நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பணம் மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட அதே நாள் என்பதால் நாற்பெரும் விழாவாக கொண்டாட வேண்டுமோ என்ற பயத்தில் திமுகவினர் ஒரு நாள் விழாவை தள்ளி வைத்துள்ளனர் என்பதை அறிந்தேன் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.