அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்யவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு அழைக்கப்பட்ட சம்மனை பெற அவர் மறுத்தார். அவரை சட்ட விரோதமாக சிறை பிடித்ததாக கூறுவது தவறு.

செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்காததால் வேறு வழியின்றி கடைசி நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்து விளக்கம் அளித்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் இதுவரை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. எனவே காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தருமாறு மனுவில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.