
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு நான்கு முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் அவர் ஆஜராகாததால் அவரை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும் அசோக்குமாரை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வழக்கில் 40 பேர் ஆஜராக சம்மன் அனுப்பிய நிலையில் 20 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜுன் மாதம் 14ஆம் தேதி அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.