தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு சிறப்பாக நடைபெற்று  முடிந்தது. மாநாடு குறித்து பலவிதமான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் தற்போது பரவுகின்றன. ஒருபுறம் விஜய் அவர்கள் தனது எதிரியான பிஜேபி மற்றும் திமுகவை நேரடியாக சாடியுள்ளதையடுத்து தமிழக வெற்றி கழக தொண்டர்கள் பாஜகவினரையும் திமுகவினரையும் சாடி வருகின்றனர். அதேபோல் திமுகவினர் தமிழக வெற்றிக் கழகத்தை சாடி வருகின்றனர். அந்த வகையில்,

சமூக வலைதளத்தில் கருத்து மோதல் ஒன்று நிலவ அது தற்போது வைரலாகி வருகிறது. அதில் திமுகவை பற்றி யார் வேண்டுமானாலும் என்ன குறை வேண்டுமானாலும் சொல்லலாம். நட்சத்திரங்கள் தோன்றும் மறையும் ஆனால் சூரியன் என்றைக்கும் மறையாது என திமுக மாணவர் அணி துணைச் செயலாளர்  அமுதரசன் என்பவர் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு குறித்து கருத்து தெரிவிக்க அதற்கு பதில் கூறிய தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர் சூரியனே ஒரு நட்சத்திரம் தான்டா தற்குறி என்று கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.