
கலைஞர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்யராஜ் அவர்கள் மேடையில் பேசுகையில், கலைஞர் வரலாரை உள்ளே சென்று பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. அதிலும் ஹோலோகிராம் தொழில்நுட்பத்தில் கலைஞர் அவர்களே முன்னாடி வந்து பேசுவது போல் உள்ளது. நாளை இந்த தொழில்நுட்பம் வந்துவிட்டால் காலம் உள்ளவரை கலைஞர் நினைவில் மட்டும் வாழ மாட்டார் நமது கண் முன்னாடி வாழ்ந்து கொண்டிருப்பார்.
வருஷா வருஷம் அவருடைய பிறந்தநாள், நினைவு நாள் கொண்டாடிட்டு தான் இருப்போம். ஆனால் அமைச்சர் அவர்கள் ஹாலோகிராபிக் என்ற தொழில்நுட்பம் மூலம் கலைஞர் குறித்து அறிந்து கொள்வது மட்டுமல்லாமல் அவருடன் நாம் எல்லாரும் நடந்து செல்வோம், சேர்ல பக்கத்தில் அமரக்கூடிய நாட்கள் எல்லாம் வந்துவிடும் அந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விடும் என்று கூறியுள்ளார்.