ரேஷன் கடைகள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு அரிசி பருப்பு கோதுமை எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்கும் நோக்கத்தில் POS கருவியுடன் மின்னணு தராசை இணைக்கும் நடைமுறை சென்னையில் ஒரு சில கடைகளில் சோதனை அடிப்படையில் அமலுக்கு வந்தது.

விரைவில் மாநிலம் முழுவதும் இந்த நடைமுறை அமலுக்கு வர உள்ளது. இதனால் எந்த ஒரு முறைகேடும் நடக்காமல் சரியான எடைக்கு பொருட்கள் விற்கப்படுவது உறுதி செய்யப்படும் என கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.