
சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில், அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 6 பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்து மதத்தை பின்பற்றுபவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.07.2024 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதையும், அதிகபட்சம் 32 வயதையும் கொண்டிருக்க வேண்டும். அரசாணை விதிகளின்படி,
ஆதி திராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர் – 37 வயது வரை
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் – 34 வயது வரை விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
சம்பள விவரம்:
Pay Level – 1 அடிப்படையில் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் அல்லாது, ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். https://hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பிறகு கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
முகவரி:
ஆணையர்,
இந்து சமய அறநிலையத்துறை,
எண்.119, உத்தமர் காந்தி சாலை,
நுங்கம்பாக்கம்,
சென்னை – 600034.
விண்ணப்பங்கள் 28.05.2025 மாலை 5.45 மணிக்குள் அந்த முகவரிக்கு கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள்:
1. கல்வித் தகுதிச் சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகல்கள்
2. அரசு அதிகாரி அல்லது கல்வியாளர் அல்லது மக்கள்தொகைப் பிரதிநிதி வழங்கிய நன்னடத்தைச் சான்றிதழ்
3. தற்போது வேலை செய்து வந்தால், தடையின்மைச் சான்று
4. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு சான்று (பதிவு எண் உள்ளிட்டது)
5. நேர்முகத் தேர்வின்போது உண்மைச் சான்றிதழ்கள் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
முக்கியக் குறிப்புகள்:
இந்த பணியிடம் முழுநேர அரசு வேலைவாய்ப்பு ஆகும்.
தேர்வானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தெரிவுசெய்யப்படுவர்.
அரசு விதிமுறைகள் மற்றும் துறையின் உள்நிலை விதிமுறைகளுக்கேற்ப நியமனம் செய்யப்படும்.
அரசு வேலை தேடும் தகுதியான இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.