சென்னை மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இருப்பினும் தமிழக அரசின் முயற்சியால் பல்வேறு இடங்களில் வெள்ளம் விரைவில் வடிந்தது. அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் உட்பட திமுக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகம் செய்து வந்தனர். அதோடு பல அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்கி மக்களுக்காக உதவினார். அந்த வகையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் ட்ரை சைக்கிளில் தண்ணீரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கினார். அவர் ராயபுரம் பகுதிக்கு நேற்று நேரில் சென்ற நிலையில் மக்களை சந்தித்து நலம் விசாரித்ததோடு சைக்கிளில் உணவு பொட்டலங்களை வழங்கினார். தேங்கியிருந்த தண்ணீருக்கு மத்தியில் அவர் சைக்கிளை ஓட்டிக்கொண்டு உணவு வழங்கியதை பார்த்தவுடன் அங்கிருந்த ஒருவர் அவர் கைகளை பிடித்துக் கொண்டு நன்றி தெரிவித்தார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.