பெங்களூரு நகரம் வித்தியாசமான சம்பவங்களுக்கே பெயர்போனது. அப்படி ஒரு சம்பவம்தான் சமீபத்தில் இணையத்தில் வைரலானது. அதாவது ஒரு பெண் தனது டீம் லீடரை ஊபர் கேப் ஓட்டும் போது சந்தித்ததாக X தளத்தில் பகிர்ந்துள்ளார். “நா ஊபர் புக் பண்ணேன்… டிரைவர் யாருன்னு பாத்தா, நம்ம ஆபீஸ் டீம் லீடர்தான்!” என்று அவர் கூறினார்.

அந்த டீம் லீடரை எதுக்காக கேப் ஓட்டுறீங்கன்னு கேட்டப்போ, அவர்  “சும்மா போர் அடிக்குது… அதான் கேப் ஓட்டுறேன்… கஷ்டம் கிடையாது, சுத்திட்டு வர்றதால சந்தோஷமா இருக்கு!” இது பலருக்கு ஆச்சர்யமா இருந்தது. சிலர் சிரித்து ரசித்தாலும், பலர் “பெங்களூரு டிராஃபிக் பாருங்க… அதுல சிக்கிக்கிட்டு சந்தோஷப்படறதா?” எனக் கேள்வி எழுப்பினர்.

அதே சமயம், சிலர் இந்த டீம் லீடர் உண்மையில் பண நெருக்கடியில் இருக்கக்கூடும் என்று சந்தேகித்தனர். “யாரும் பொழுதுபோக்குக்காக கேப் ஓட்ட மாட்டாங்க… உண்மையிலே லாபத்துக்காகத்தான் செய்வாங்க,” என ஒருவர் பதிவிட்டார். “அதிகமாக சம்பாதிக்க யாரும் மறுக்க மாட்டாங்க,” என்றும் மற்றொருவர் கருத்து தெரிவித்தார்.

இதுபோன்ற சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகமாகவே நடக்கின்றன. முழுநேர வேலையில் இருக்கிற பலர், கூடுதலாக வருமானம் சம்பாதிக்க ராபிடோ, உபர் மாதிரி வேலையை இரவில் அல்லது விடுமுறை நாட்களில் பணி செய்து வருகிறார்கள். இதைச் சுற்றி வரும் இந்த சம்பவம், இன்றைய வேலைவாய்ப்பு சூழ்நிலையும், வாழ்வாதாரச் சிக்கல்களையும் வெளிப்படுத்துகிறது.