
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது. இதில் கேப்டன் சுப்மன் கில் 104 ரன்களும், சாய் சுதர்சன் 103 ரன்களும் எடுத்து சதம் அடித்து அசத்தினர். இதைத்தொடர்ந்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. இதனால் 35 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சுப்மன் கில்லுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டியில் குஜராத் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. இதனால் அந்த அணியின் கேப்டன் கில்லுக்கு ஐபிஎல் நிர்வாகம் ரூ.12 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இதேபோன்று சென்னை அணிக்கு எதிராக ஏற்கனவே நடைபெற்ற ஒரு போட்டியிலும் குஜராத்த அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. இதனால் ஐபிஎல் நிர்வாகம் ஏற்கனவே சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்தது. மேலும் இதனால் தற்போது அவருக்கு ஐபிஎல் நிர்வாகம் ரூ.24 லட்சம் அபராதம் விதித்துள்ளதோடு ஒரு போட்டியில் விளையாடவும் தடை விதித்துள்ளது.