
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து மக்களிடையே தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகை சமந்தா. இவர் தற்போது தயாரிப்பாளராக அறிமுகம் ஆகிறார். தயாரிப்பாளராக அறிமுகமாகும் சமந்தாவின் முதல் படமான ‘சுபம்’ என்ற திரைப்படத்தின் நிகழ்ச்சி ஒன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
இந்த நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அடிக்கடி தன்னுடைய கண்களை துடைத்துக் கொண்டே இருந்துள்ளார். இதனால் சமந்தா மகிழ்ச்சியில் கண் கலங்கினாரா? இல்லை வேறு ஏதும் சோகமா? என அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியதால் சமந்தா இதற்காக விளக்கம் அளிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, அதிக வெளிச்சம் உள்ள லைட்டிங்கால் எனது சென்சிட்டிவ் கண்கள் பாதிக்கப்படுகிறது. அதனால் கண்களில் இருந்து கண்ணீர் கசிகிறது என கூறினார்.
எனவே தான் அடிக்கடி கண்களை துடைத்ததாகவும் வேறு எந்த ஒரு காரணமும் இல்லை. நான் மகிழ்ச்சியாக உள்ளேன் எனக் கூறியுள்ளார். இதேபோன்று சில வருடங்களுக்கு முன்பு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை, தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா சிறிது காலம் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து இருந்தார். இப்போது அதிக வெளிச்சத்தால் கண்கள் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.