
தமிழக வெற்றிக்கழக மாநாடு சீரும் சிறப்புமாக நடைபெற்ற முடிந்தது. மாநாடு நடைபெறுவதற்கு முன்பாக வரக்கூடிய தொண்டர்களின் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி சில விஷயங்கள் மாநாட்டில் தடை செய்யப்பட்டு இருப்பதாக அறிவிப்பு பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவை எல்லாவற்றையும் மீறி தொண்டர்கள் விஜய் அவர்களின் பேச்சை கேட்காமல் மாநாட்டு திடலிலேயே அமர்ந்து மது அருந்துவது சிகரெட் விற்பனை செய்வது சிகரெட் வாங்கி புகை பிடிப்பது என அத்துமீறிய செயலில் ஈடுபட்டு வருவதாக வீடியோ காட்சிகள் ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
தற்போது அந்த வீடியோ காட்சிகள் போலியானவை சில நபர்களால் வேண்டுமென்றே மாநாட்டை சீர்குலைக்க சதித்திட்டம் தீட்டி எடுக்கப்பட்டது என்பதை ஆதாரப்பூர்வமாக தமிழக வெற்றி கழகம் வீடியோவாக வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு இடத்தில் நாற்காலியில் அமர்ந்து மது அருந்துவது போல் இருக்கக்கூடிய இளைஞர்கள் வேறு சில இடங்களில் நின்று கொண்டு இனிமேல் நாங்க தான் நாங்க மட்டும்தான் தமிழக வெற்றிக்கழகம் தான் என கூச்சலிட்டு கலாட்டா செய்வது போன்ற மற்றொரு வீடியோவிலும் முந்தைய வீடியோக்களில் இருந்த அதே நபர்கள் இடம் பெற்றிருந்தனர்.
இதே போல் மாநாட்டு திடலின் பல பகுதிகளுக்குச் சென்று ஆங்காங்கே நின்று வீடியோ எடுத்து தமிழக வெற்றிக்கழக மாநாட்டு திடலில் களங்கம் விளைவிக்கும் விதமாக நடந்து கொள்ளும் அவர்களுக்கும் தமிழக வெற்றிக்கழகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது தமிழக வெற்றி கழக தொண்டர்கள் செய்தது அல்ல வெளியில் இருந்து வந்த நபர்கள் மாநாட்டை சீர்குலைக்க திட்டமிட்டு செய்த சதி என பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
BIG BREAKING 😲😲#தவெக மாநாட்டை சீர்க்குலைக்க போட்ட சதி திட்டம் அம்பலம் 🙏
FAKE NEWS EXPOSED 🚫🚫🚫#TVKMaanadu @tvkvijayhq pic.twitter.com/11MK9FixnW
— Vaathi T V K (@mangathadaww) October 27, 2024