
நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அபாய கட்டத்தை தாண்டிவிட்டது. இதைத்தொடர்ந்து தலைநகர் சென்னையிலும் காற்று மாசுபடு அதிகரித்துள்ளது. அதன்படி காற்று மாசுபாடு வாரியம் அளித்த தகவலின் படி கிட்டத்தட்ட சென்னையில் மட்டும் 4 இடங்களில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது.
அதன்படி பெருங்குடியில் 262 ஆகவும், வேளச்சேரியில் 224 ஆகவும், அரும்பாக்கம் பகுதியில் 248 ஆகவும், ஆலந்தூரில் 252 ஆகவும் காற்று தர குறியீடு உள்ளது. இதேபோன்று ராயபுரத்தில் 169 ஆகவும், மணலியில் 189ஆகவும், கொடுங்கையூரில் 165 ஆகவும் இருக்கிறது. மேலும் எந்த ஒரு இடத்திலும் தற்போது தரமான காட்சி இல்லை என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.