தமிழகத்தில் திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, கரூர், சேலம், ஈரோடு, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டரிக்கும் என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கூறிய மாவட்டங்களில் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக கூடும் என கூறியுள்ளார். காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் அறிவுறுத்தியுள்ளார்.