உத்தர் பிரதேஷ் மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் ஒரு குரங்கை கொலை செய்த புதைத்து விட்டதாக காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அஞ்சனி மிஸ்ரா என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து புதைக்கப்பட்ட குரங்கை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குரங்கு துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.