தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் நடிகர் விஜய் பல்வேறு தரப்பினரும் விமர்சிக்க தொடங்கிவிட்டனர். அதாவது நடிகர் விஜய் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று அறிவித்தது வரவேற்பை பெற்றாலும் அவருடைய கொள்கைகளை பலரும் விமர்சித்து வருகிறார்கள் அதாவது நடிகர் விஜயின் கட்சி கொள்கைகளில் உடன்பாடு இல்லாததால் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை தெரிவித்து வரும் நிலையில் சீமான் நேற்று சரமாரியான விமர்சனங்களை முன்வைத்தார்.

நடிகர் விஜய் கட்சி தொடங்கிய புதிதில் தம்பி தம்பி என்று கூறி அவர் தன்னுடைய முழு ஆதரவும் அவருக்கு தான் என்று தெரிவித்தார். ஆனால் கொள்கைகளை அறிவித்த பிறகு விஜயை விமர்சிக்க தொடங்கி விட்ட விட்டார். இதற்கு நாம் தமிழர் கட்சியை நிர்வாகி சாட்டை துரைமுருகன் புது விளக்கம் அளித்துள்ளார். அதாவது தி கோட் படத்தை அவர் உதாரணமாக கூறி அந்த படத்தில் விஜய் தன்மகன் தவறானவன் தெரிந்தவுடன் எப்படி கோபத்தை வெளிப்படுத்துகிறாரோ அதேபோன்று தான் சீமான் விமர்சிக்கிறார். மேலும் சீமான் விஜயை நிஜத்தில் தம்பியாக நினைத்த நிலையில் அவர் தவறான அரசியலை கையில் எடுத்ததால் தற்போது விமர்சிக்கிறார் என்று கூறினார்.