ஈநாடு குழும நிறுவனங்கள் மற்றும் ராமோஜி குழுமத்தின் தலைவரான சி‌.எச். ராமோஜி ராவ் (88) இன்று அதிகாலை உடல்நலக் குறைவினால் மரணமடைந்தார். அவருடைய உடல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் அமைந்துள்ள அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருடைய மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பத்ம விபூஷன் திரு. ராமாஜி ராவ் மறைவு வருத்தத்தை அளிக்கிறது. அவருடைய பங்களிப்பு திரைத்துறை மற்றும் பத்திரிக்கை துறையில் என்றும் நிலைத்திருக்கும். மேலும் இந்த துயரமான நேரத்தில் அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.