
எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களை வாங்கினால் அதற்கு மானியம் கிடையாது. சிலிண்டர் என்பது அனைவருடைய வீட்டிலும், கிராம புறங்களிலும் கூட பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். அந்த அளவிற்கு சிலிண்டர் நம்மளுடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறி விட்டது.
நாம் சிலிண்டருக்கு புக் செய்தால் போதும் வீட்டிற்கு சிலிண்டர் டெலிவரி செய்து விடுவார்கள். இவ்வாறு டெலிவரி செய்யப்படும் கேஸ் சிலிண்டர் காலாவதி தேதி எப்படி தெரிந்து கொள்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். உதாரணமாக, சிலிண்டரில் A2024 என குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த சிலிண்டர் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்துக்குள் பரிசோதிக்கப்பட வேண்டும் என்று அர்த்தம். A-என்பது ஜனவரி-மார்ச், B-ஏப்ரல்-ஜூன், C-ஜூலை-செப்டம்பர், D-அக்டோபர்- டிசம்பர் குறிக்கக்கூடிய காலக்கட்டங்கள் ஆகும். இதன்மூலம் சிலிண்டர் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும். பரிசோதிக்கப்பட்ட பின் அடுத்த சோதனைக்கான தேதி சிலிண்டரில் ஒட்டப்படும்.