மராட்டிய மாநிலம் நாசிக் பகுதியில் ஹர்ஷத் பதாங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பிரபல ரவுடி. இவரை குற்ற வழக்குகளில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்திருந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி வெளியே வந்தார். அவர் சிறையில் இருந்து வெளியே ‌ வந்த நிலையில் அவருடைய ஆதரவாளர்கள் இருசக்கர வாகனங்களில் காத்திருந்தனர்.

அவர் திறந்த வெளி காரில் கையசைத்தவாறு சென்ற நிலையில் ‌ அவருடைய ஆதரவாளர்கள் இரு சக்கர வாகனங்களில் பேரணியாக பின்தொடர்ந்து சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் காவல்துறையினரின் பார்வைக்கு சென்றது. இதனால் அனுமதி இன்றி பேரணி நடத்திய குற்த்திற்காக அவரை மீண்டும் ‌ கைது செய்து சிறையில் அடைத்தனர்‌. மேலும் அவருடைய ஆதரவாளர்கள் ‌6 பேரையும் கைது செய்துள்ளனர்.