உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டம் முஸ்காரா காவல் நிலைய எல்லை பகுதியில், சிறுமியை தொடர்ந்து தொந்தரவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஷிவ் குமார் சாகு என்ற நபர், மத்தியில் சாலையிலேயே மக்கள் முன்னிலையில் செருப்ப்பால் அடிக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்ட இவர், கடந்த சில நாட்களாக அந்த சிறுமியை பின்தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

 

9 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில், சிறுமியின் தாய், குற்றவாளியை 15 முறை செருப்பால்  அடிக்கிறார், மேலும் சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து அவனை அடித்த காட்சி பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து முஸ்காரா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள், ஆனால் சிறுமியின் குடும்பத்தினர் இதுவரை எழுத்துப்பூர்வ புகார் அளிக்கவில்லை. போலீசார் தற்போது ஏற்கனவே கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். புகார் கிடைத்ததும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும்  சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பெரும் விவாதத்தையும், மக்களிடையே கடும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.