
பாஜகவை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி மோசடி வழக்கில் உதவி கோரி ஒரு பெண் தனது 17 வயது மகளுடன் எடியூரப்பாவை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அவர் தன்னுடைய மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து எடியூரப்பா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.